ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான அக்காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Trending
- நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி
- கைதானவர்களை அழைத்துவர இந்தோனேசியா சென்ற விசேட பொலிஸ் குழு
- செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் : யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
- சாவகச்சேரியில் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு