பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழா சனிக்கிழமை [15] நடைபெற்றபோது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல், பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.
து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக விமானத்தில் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
காஸ்கி மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் காவல் கண்காணிப்பாளர் ஷியாம்நாத் ஒலியா, மேம்பட்ட சிகிச்சைக்காக இடமாற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
நேபாளத்தின் நிதி அமைச்சரான பவுடலின் கைகளிலும் முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன, அதே சமயம் ஆச்சார்யாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக அமைச்சரின் செய்தி ஆலோசகரான புவன் கேசி தெரிவித்தார்.