கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை ஒப்படைப்பது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஹமாஸ் திங்களன்று அறிவித்ததை அடுத்து, “காஸ பகுதியில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும்” தயாராக இருக்குமாறு இராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸின் அறிவிப்பை “காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாக” கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காஸாவில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும் மிக உயர்ந்த மட்டத்தில் தயார் நிலையில் இருக்கவும், என்கிளேவ் அருகே உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும்” இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதாக காட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளுடன் நிலைமை மதிப்பீட்டுக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் Ynet செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்