குடும்ப தகராறு காரணமாக தம்பியை வாளால் வெட்டிய சம்பவம் பதுளை நகரில் இடம்பெற்றுள்ளது.
பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நேற்று மாலை ஒரு சகோதரர் தனது தம்பியை பத்து நிமிடங்களுக்கு மேல் வாளால் வெட்டியுள்ளார்
வாள் வெட்டு தாக்குதல்களுக்கு இலக்காகிய சகோதரர் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் பதுளை பொலிசாரின் ஓட்டுநர் மற்றும் சார்ஜென்ட் அங்கு வந்து சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தனர்.
சம்பவம் தொடர்பாக பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.