பண்டிகைக் காலத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளில் காயமடைந்தவர்கள் ஆவார்.
பட்டாசு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
பொதுமக்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டால் பண்டிகைக் காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு செய்தித் தொடர்பாளர் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டார்.