தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 222ஆவது ஞாபகார்த்த விழா வவுனியா மாநகரசபை மற்றும் கலாசார பேரவையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று (25) இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக வாயிலில் இருந்து சிலை அமைந்துள்ள பகுதிவரை பண்டாரவன்னியனின் படைசூழ விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் பண்டாரவன்னியனின் நினைவுப்பேருரையினை சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியிருந்ததுடன் ஏனைய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
மாநகரமுதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேசசெயலாளர் இ.பிரதாபன், உள்ளூராட்சி மன்ற உப தவிசாளர்கள், ஆணையாளர் பொ.வாகீசன், மாநகரசபையின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



