மேற்கு சூடானின் எல் ஃபாஷரில் உள்ள அபு ஷோக் இடம்பெயர்வு முகாமில் கடந்த 40 நாட்களில் குறைந்தது 95 பேர் பசியாலும் ,நோயாலும் இறந்துள்ளதாக தன்னார்வக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
அபு ஷோக் முகாம் அவசர சிகிச்சைப் பிரிவு ஒரு அறிக்கையில், முகாம் குடியிருப்பாளர்களிடையே ஐந்து வயதுக்குட்பட்ட 73 குழந்தைகளும் 22 முதியவர்களும் இறந்துவிட்டதாகக் கூறியது.
“எல் ஃபாஷரில் பாதுகாப்பு ,மனிதாபிமான நிலைமை என்பன மோசமாகவே உள்ளன. குடியிருப்பாளர்கள் உணவு, தண்ணீர் , சுகாதாரப் பராமரிப்பு என்பனவற்றுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் உதவியும், அடிப்படை சேவைகளும் வழங்க முடியாதுள்ளது.
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதுகாப்பின்மைக்கு மத்தியில் நகரம் முழுவதும் அடக்கம் செய்யப்படாத உடல்களை மேற்கோள் காட்டி, வரவிருக்கும் சுகாதார நெருக்கடி குறித்து குழு எச்சரித்தது, மேலும் மோதலில் இருந்து தப்பி ஓடும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான வழித்தடங்களை நிறுவ சர்வதேச அமைப்புகளை வலியுறுத்தியது.