டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்த நிலையில், கெஜ்ரிவாலின் பார்வை பஞ்சாப் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாபில் காலியாக உள்ள லூதியானா சட்டமன்ற தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிடப் போவதாகவும், பஞ்சாப் முதல்வர் பதவியில் அவர் அமர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் பஞ்சாப் மட்டுமே. கடந்த 2022 ஆம் ஆண்டு 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். இருப்பினும் டெல்லியில் இருந்தபடி பஞ்சாப் அரசையும் கெஜ்ரிவாலே இயக்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் மானுக்கு எதிராக அங்கு உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. சில எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பஞ்சாப் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களை டெல்லிக்கு வரவழைத்துள்ளார் கெஜ்ரிவால். அவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதில் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.
Trending
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்
- நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் விஷால்
- சீன இலங்கை ஊடக உறவுகள் அதிகரிக்கப்படும்
- பிங்கிரியாவில்இலங்கையின் முதல் தேனீ பூங்கா