நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், போராட்டக்காரர்களால் அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கும்பல்கள் தொடர்ந்து அரசாங்க கட்டிடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் ,அரசியல் கட்சிகளின் அலுவலகங்களைத் தாக்கி தீ வைத்து எரிக்கின்றன.நேபாள செய்தி ஊடகமான கபர் ஹப், ஒரு கும்பல் சித்ரகரை வீட்டிற்குள் அடைத்து வைத்து கட்டிடத்திற்கு தீ வைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
சித்ரகரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் கீர்த்திபூர் பர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.
Trending
- இலங்கையின் இறையாண்மையை மதிக்க வேண்டும் சீனா
- இலங்கையில் மனித உரிமை முன்னேற்றத்தை இங்கிலாந்து வலியுறுத்துகிறது
- நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி மரணம்?
- துணை ஜனாதிபதி தேர்தல் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி
- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு பிரதமர் ராஜினாமா
- பத்திரிகைப் பேரவைச் சட்டத்தில் திருத்தம்
- ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை
- ஜனாதிபதி வரப்பிரசாதம் சட்டமூல இரத்து தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்