Saturday, September 13, 2025 1:04 am
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றார்.
கார்க்கியை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் இந்தப் பதவிக்கு நியமித்தார், பின்னர் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் ஜனாதிபதியால் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
கார்க்கி அனைத்து அமைச்சுக்களையும் தன்னிடமே வைத்துக் கொள்கிறார், மேலும் அவரது இடைக்கால அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தும் பொறுப்பில் உள்ளது என்று வாசிக்கப்பட்ட நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 வயதான கார்கி, நேபாளத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது மட்டுமல்லாது ஒரே பெண்மணி ஆவார்.

