நேத்ரா எழுதிய புலம் பேசும் மண்வாசம், மகவைதேடி, கற்றுத்தரும் வானம் என்னும் மூன்று நூல் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிளி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் கலந்து கொண்டார்.
இவ் மூன்று நூலின் முதற்பிரதியினை கிருபா லெனஸ் பணியாளர் சுஜந்தன் கிளிநொச்சை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது பிரதி நூலினை நேத்ரா உறவினர் நந்தினி ரங்கீஸ்வரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.