நெடுந்தீவில் நேற்றையதினம்(18) மாலை வேளை முதலை ஒன்று உயிருடன் பிடிபட்டுள்ளது.
நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே முதலை கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச சபையின் உபதலைவரின் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதலையை குறித்த திணைக்களத்தினர் கடலில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டபோது, அதனை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததனையடுத்து திணைக்களத்தின் கிளிநொச்சி அலுவலகம் ஊடாக மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவுக்கு எவ்வாறு முதலை வந்தது, வேறு முதலைகள் தீவுக்குள் உள்ளதா, எனும் கேள்விகளுடன் இதற்கான நிரந்தர தீர்வு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு என்பன தொடர்பிலும் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”