மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து (10) அதிகாலை 5.00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வானின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும்இ விபத்தில் வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை