நுவரெலியா- கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் 23பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த பயணிகள் குருநாகல் மற்றும் கிரிபன்வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.