நுவரெலியா உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவிவருகின்றது.
கடந்த சில நாட்களாகவே இந்நிலைமை காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். முன்னோக்கி செல்லும் வாகனங்களை உரிய வகையில் அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா நகர எல்லை, ஹவாஎலிய, பொரலந்த, உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி போன்ற பகுதிகளில் மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை