கட்டான – கண்டவல பகுதியிலுள்ள விருந்தகத்தின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.