விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.