மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.