மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இளைஞனை சித்திரவதை செய்த வழக்கில் குற்றம் சாட்டம் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பதில் பொலிஸ்மா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை (04) பணி நீக்கம் செய்துள்ளார்.
மாத்தறை, மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி ,கல்கிஸ்ஸை பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளையும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மாத்தறை மேல் நீதிமன்றம் ஜனவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
நிலையில் வழக்கு விசாரணை பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Trending
- ரி20 கிறிக்கெற்றில் 13,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியர்
- கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் முயற்சி
- கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி
- இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக மேற்குக் கரையில் வேலைநிறுத்தம்
- ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடு
- இங்கிலாந்து கிறிக்கெற் அணியின் கப்டனாக ஹாரி புரூக் நியமனம்
- சீமானை புகழ்ந்த அண்ணாமலை மோடியை புகழ்ந்த சீமான்
- மோடியின் விஜயத்தின் போது இலங்கை ஊடகங்கள் விலக்கி வைக்கப்பட்டன