காங்கோவில் கோமாவைச் சுற்றி நான்கு நாட்களில் நடந்த சண்டையில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.
கிழக்கு நகரத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களின் கடந்த வாரம் நடத்திய மோசமான தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனை சவக்கிடங்கில் 773 உடல்கள் இருப்பதாக காங்கோ சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.அப்பகுதியில் உள்ள பிணவறைகள் நிரம்பியதால் பல உடல்கள் தெருவில் கிடக்கின்றன என்று அமைச்சகம் மேலும் கூறியது.
ஜனவரி 26 ஆம் திகதிக்கும், 30 ஆம் திகதிக்கும் இடையில் நடந்த மோதலில் சுமார் 2,800 பேர் காயமடைந்ததாக கருதப்படுகிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான சண்டை காரணமாக மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர்ந்துள்ளனர்.