Friday, January 31, 2025 5:19 pm
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் சிந்தக டி.ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அவர் நியமிக்கப்பட்டார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார ஆகியோர் முன்னதாக இராஜினாமாச்செய்தனர்.
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம்.ரணதுங்க நேற்று இராஜினாமா செய்துள்ளார்.

