2025 மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (30) இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில், இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்துள்ளது.
இன்று தொடங்கும் இத்தொடர் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை, 8 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் நான்கு மைதானங்களிலும், இலங்கையில் ஒரு மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
லீக் முறையில் நடைபெறும் இத்தொடரின் ஆரம்ப சுற்றில், ஒவ்வொரு அணியும் ஏழு போட்டிகளில் விளையாடவுள்ளது.
இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றில் பங்கேற்கும் ஏழு போட்டிகளில், ஐந்து போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலும், இரண்டு போட்டிகள் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.