அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக லொறிகளுக்கும் வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் இந்தப் புதிய வரி விதிப்பை உறுதி செய்துள்ளார். இது அதிகளவில் லொறிகளை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அதேசமயம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உள்நாட்டு நிறுவனங்களான பீட்டர்பில்ட், கென்வொர்த், டெய்ம்லர் டிரக் போன்ற நிறுவனங்கள் இதனால் பயனடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.