பஸ்ஸில் பயணம் செய்வோர் நவம்பர் 30 ஆம் திகதி முதல் வங்கி வழங்கிய கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்கான இலாகாவையும் வைத்திருக்கும் அமைச்சர் ரத்நாயக்க, பொதுப் போக்குவரத்திற்கான டிஜிட்டல் கொடுப்பனவுகளை நோக்கிய ஒரு படியாக இன்று (8) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.