யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையிலேயே இப் பந்தல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய மேற்கு வீதியில் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நிகழ்ந்த ஆரம்ப வைபவத்தில் ஆலய அடியவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.