ஈழத்து இளைஞர்கள் தயாரித்துள்ள ‘தீப்பந்தம்’ ஈழ திரைப்படமானது நல்லூரான் மஞ்சத்திருவிழாவான இன்று (07) இரவு 8.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் திரையிடப்படவுள்ளது.
புத்திகெட்ட மனிதரெல்லாம், டக் டிக் டோஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக ‘தீப்பந்தம்’ Blackboard International நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
‘தீப்பந்தம்’ திரைப்படமானது ராஜ் சிவராஜ் இயக்கத்தில் ராஜ்சிவராஜ், அருண் யோகதாசன், பூவன் மதீசன் ஆகிய மூவரின் எழுத்தில் சதுர்ஜனின் துணை இயக்கத்தில் சிவராஜா தயாரிப்பில், பூவன் மதீசன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரின் இசையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
“ஈழத்து இளைஞர்கள் தயாரித்துள்ள ‘தீப்பந்தம்’ என்ற ஈழ சினிமா தனித்துவமான பாணியிலும் கதை சொல்லும் முறையாலும் உலக சினிமா இரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் போராட்டம் பற்றிய பார்வையும் அடுத்த இளம் தலைமுறைக்கு கடத்தும் வரலாற்று ஆவணமாகவும் தமிழர் வாழ்வியல் யதார்த்தங்களை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
‘தீப்பந்தம்’ ஈழத்தமிழர் மரபையும் அதன் அரசியல் பண்பாட்டு அசைவையும் முதன்மைப் படுத்துகின்றது” என சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
