Friday, April 4, 2025 11:24 am
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆத்திச்சூடி மற்றும் நடிகர் தர்ஷன் இடையே கார் பார்க்கிங் குறித்து பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகிய மூவரையும் தாக்கியதாக ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தர்ஷன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், நீதிபதி மகன், அவரது மனைவி மற்றும் மாமியார் மீது நடிகர் தர்ஷன் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

