Monday, September 29, 2025 10:28 am
நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
குட் பாட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் டுபாயில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சம்பியன்ஸ் (Constructor Champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
விருது நிகழ்வின்போது அஜித்தின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

