நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.
தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ரிங்வோர்ம் என்ற பூஞ்சை தோல் நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் ஏற்பட்டால், தோலில் சிவப்பு, வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும்.
தோல் தொடர்பு அல்லது ஆடைகள் போன்றவற்றின் ஊடாக இந்த நோய் பரவுகிறது.
இந்த நோய் காரணமாகத் தோல் சிதைவு, வறட்சி, சிவத்தல், அரிப்பு, எரிதல் மற்றும் ஒட்டும் தன்மை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.
இந்தநிலையில் இலங்கை அரசால், பதிவு செய்யப்படாத பூச்சுக்கள் அல்லது உரிய ஆய்வக விபரங்கள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நோயைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் சுய சுகாதார பழக்கவழங்கங்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.