மத்திய மாகாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 2025 மே 15 இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மாணவர்களுக்கும் பல்துறை உதவிகளை வழங்கினார்.
பேராதனை இந்துக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா , கணினிகள், இசைக்கருவிகள், நூலகத்திற்கான புத்தகங்கள் , விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கிஆர்.
மாத்தளை மாவட்டம் எல்கடுவ தோட்டத்தில் உள்ள இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் (IHP) கட்டம் III இன் ஒரு இடத்தை உயர் ஸ்தானிகர் பார்வையிட்டு திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடினார். தோட்டத்தில் பணிபுரியும் குடும்பங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் , மழைக்கோட்டுகளையும் வழங்கினார்.
