Saturday, August 2, 2025 10:29 am
அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட தெம்பிலியான பகுதியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 41 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 41 பேர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

