பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை ,கரவெட்டி,மருதங்கேணி ஆகிய சுகாதாரப்பணிமனைகளின் வழிகாட்டலுடன் 25 ஆம் திகதி காலை 730 மணிக்கு மாலிசந்தி பிள்ளையார் கோவிலில் இருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை நடைபவனி நடை பெறும்.
பருத்தித்துறை வைத்திய அத்தியட்சர் டாக்டர் யோ,திவாகர் தலைமையில் நடைபெறும் விழாவில் டாக்டர் ஆ,கேதீஸ்வரன் பிரதம விருந்தினராகவும், டாக்டர்,சு .சிவகணேஸ், மோ,தெய்வேந்திரன், திருமதி சிவகாமி உமாகாந்தன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், க.செல்வராஜன், சி,ரகுபரன் ஆகியோர் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொள்வார்கள்.