சென்னை: ஆங்கில புத்தாண்டு, தை புதிய நம்பிக்கைகளுடன் பிறந்துள்ளது. பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. யோகங்கள் கொட்டும் இந்தத் தை மாதத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சிகள் உள்ளன. தை மாதத்தில் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள் குறித்து ஏற்கனவே பார்த்துவிட்டோம். இந்த தொகுப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டிய ஐந்து ராசிகள் குறித்து பார்க்கவுள்ளோம்.
செவ்வாய் நாளை ஜனவரி 21 ஆம் தேதி கடகத்தில் இருந்து பின்னோக்கி மிதுனத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல சுக்கிரன் வருகிற ஜனவரி 28 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் உச்ச பலம் அடைய உள்ளார். அதேநேரத்தில் செவ்வாய் வக்கிர நிலைக்கு செல்ல உள்ளார்.
ஏற்கனவே குரு வக்கிர நிலையில் உள்ளார். இந்நிலையில் குரு வக்கிர நிவர்த்தியும் இந்த மாத இறுதியில் உள்ளது. ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் இருப்பார்கள். ராகு தோஷத்தை உருவாக்கினாலும் குரு அதை கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் இந்த காலத்தில் அரசுப் பணியில் இருப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்ட சில ராசிகள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்கு நரம்பு சார்ந்த பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அண்டை, அயலாருடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் பதற்றம் குறைந்தாலும் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கன்னி: கன்னி ராசி பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி, தொழில் ஆகியவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும். சுயமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை விவகாரத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம் நன்றாக இருந்தாலும் குடும்பம் சார்ந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
துலாம்: துலாம் ராசிக்கு அவர்களின் ராசிக்கான தராசு குணத்தைப் போலவே நல்லது – கெட்டது சரிசமமாக நிறைந்திருக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல மாற்றம் நிகழும். நிலம், வீடு சம்பந்த்தப்பட்ட விஷயத்தில் சாதகமான முடிவுகள் வரும். அதேநேரத்தில் படபடப்பு, பதற்றம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். சரியான தூக்கம் இருக்காது. தூக்கம் கெட்டால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலனில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும்.
மகரம்: மகர ராசி கண் மற்றும் நரம்பு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சட்டத்துக்கு புறம்பானவர்களுடனான பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். குழந்தைகளுடனான உறவிலும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை சரியாக கண்காணிக்க வேண்டும். தொழிலில் கூட்டாளிகளுடன் கருத்து மோதல் உருவாகும்.
கும்பம்: கும்ப ராசி வாழ்க்கை துணை மற்றும் ரத்த பந்த உறவுகள் சம்பந்தப்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூர்விக சொத்தில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் கவனமாக முடிவெடுக்க வேண்டும். எதிரிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். மனக்கவலைகளால் தூக்கம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.