யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (17) பிற்பகல், பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். குறித்த தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னியசிங்கம் பிரபாகரன், இந்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர், குறித்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இலவசமாகவே பணியாற்றுவார் என சபையில் வாக்குறுதி அளித்தார்.
Trending
- ஹட்டன் காலணியகத்தில் தீ விபத்து
- தசி கணேஷன் கொத்மலை தொகுதி மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு
- திருப்பூரிலிருந்து கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி
- முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
- சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம் நகரசபை ஏற்பாடு
- இஸ்ரேலிய தாக்குதலில் காஸாவில் 34 பேர் கொல்லப்பட்டனர்
- இயக்குனர் வேலு பிரபாகரன் மாரடைப்பால் காலமானார்
- ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’ 30 ஆண்டுகளின் பின் மீண்டும் வெளியாகிறது