தேவை ஏற்படின் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ரஷ்யஜனாதிபதி விளாடிமிர் புட்டின்,பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யா செவ்வாயன்று தெரிவித்தது.
உக்ரைனில் மூன்று ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்தக் கருத்து வெளியானது.இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
“தேவைப்பட்டால் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புட்டினே கூறினார், ஆனால் ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்ற யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தங்களின் சட்ட அடிப்படை விவாதிக்கப்பட வேண்டும்” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது.