Saturday, April 19, 2025 12:23 am
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக PAFFREL கண்காணிப்பாளர்களும் தமக்குத் தெரிவித்ததாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல்கள் பணிகளுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்குகளிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

