Wednesday, August 20, 2025 10:46 am
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.
எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் இன்று நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

