தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.