இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சம்பளப் பட்டியலில் தேசபந்துவின் பெயர் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, குற்றச்ம் சாட்டினார்.
2025 வரவு செலவுத் திட்டங்களுடன் தொடர்புடைய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் செலவினத் தலைப்பின் மூன்றாவது வாசிப்பின் குழுநிலை விவாதத்தை நேற்று (18) தொடங்கி வைத்துப் பேசிய ஹேஷா விதானகே மேலும் தெரிவிக்கையில்
தென்னகோனுக்கு மாத சம்பளமாக 150,000 ரூபா கொடுக்கப்பட்டது. , 200 லீற்றர் பெட்ரோல், மொபைல் போன் , மடிக்கணினி போன்ற பிற ஆடம்பர பொருட்களையும் வழங்கியது.
“இது ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஐஜிபிக்கு லஞ்சம் கொடுத்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
“ஷம்மி சில்வா,தென்னகோன் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கவும், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புகார் அளிக்கவும் இந்த NPP அரசாங்கத்துக்கு நான் சவால் விடுகிறேன் என்றார்.