தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச்சாலையிலிருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டு கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ள புறாக்களே இந்த புறாக்கள் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருடப்பட்ட புறாக்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் குறித்துச் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.