Tuesday, March 4, 2025 10:48 am
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமூகவலைதளங்களில் பல ரீல்ஸ் வீடியோக்களைப் பகிர்ந்து இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அதிலும் குறிப்பாக புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படக் காட்சிகளை அவர் ரிக்ரியேட் செய்து வெளியிட்ட வீடியோக்கள் இந்திய அளவில் வைரலாகின.
சில மாதங்களுக்கு முன்னர் அவர் கேங்ஸ்டர் உடையில் உள்ள புகைப்படங்கள் வைரலாகின. இது ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி என்று ரசிகர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.
நிதின் , ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் ராபின் குட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கி வருகிறார். இந்த படத்தில்தான் வார்னர் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது. படம் மார்ச் 28 ஆம் திகதி வெளியாகிறது.

