தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.
வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும் மீண்டும் காட்டுத் தீ பரவியுள்ளது.
இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 19 பேர் காயமடைந்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ சுமார் 43000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன.
காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.