தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.
திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் பலர் ஆண்டுகள் பல கடந்தும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா, நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், மகேஸ்வரி, சிவரஞ்சனி, ஆகியோர் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.