Tuesday, July 15, 2025 6:21 am
மீரிகமவில், அனுமதியின்றி காணி ஒன்றினுள், தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

