ரஷ்ய -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி , இனாதிபதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்தின், அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் துருக்கி பேச்சுவார்த்தையை திடீரென புறக்கணித்த புட்டின் தனக்கு பதில் உதவியாளர்கள் குழுவை அனுப்பி வைத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த ட்ரம்ப், விரைவில் புதினை சந்தித்து பேசுவேன் என்று கூறினார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை துருக்கியின் இஸ்தான்புல்லில் தங்கள் சந்திப்பை முடித்து, ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தவும், பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை நடத்தவும் ஒப்புக்கொண்டனர்.
இரண்டு மணி நேர பேச்சுவார்த்தையின் முக்கிய விளைவாக, ரஷ்யாவும் உக்ரைனும் இரு தரப்பிலிருந்தும் 1,000 பேர் கொண்ட கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டன.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி நேரடிப் பேச்சுவார்த்தை மார்ச் 2022 இல் இஸ்தான்புல்லில் நடைபெற்றது, அங்கு இரு தரப்பினரும் சண்டையை நிறுத்த உடன்படத் தவறிவிட்டனர்.