துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியான சிந்திர்கி நகரில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 81 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் பதினாறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் 29 பேர் காயமடைந்தனர்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.