முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி (20) கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.