Thursday, April 3, 2025 6:24 am
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

