தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் 788 தகுதியுள்ள எம்.பி.க்களில் 767 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர், இது 98.2 சதவீத வாக்குப்பதிவாகும். 752 பேரின் செல்லுபடியாகும் 15 செல்லாதவை என்று பி.சி. மோடி கூறினார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 வாக்குகளைப் பெற்று, ‘இண்டி’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை அவர் வீழ்த்தினார். நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, கடந்த ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் இராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தியது.