Wednesday, January 29, 2025 8:25 am
தென் கொரியாவில் உள்ள புசானில் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏ321 மொடல்ஏர் பூசன் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன்பு தீப்பிடித்தது, ஆனால் அதில் இருந்த 176 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரிய விமான நிறுவனமான ஏர் புசான் இயக்கும் ஏர்பஸ் விமானம் ஹொன்கொங்குக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தென்கிழக்கில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் அதன் பின் பாகங்கள் தீப்பிடித்ததாக போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தின் 169 பயணிகள், ஆறு பணியாளர்கள், ஒரு பொறியாளர் இருந்தனர் அனைவ்ரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

